பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பு – ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு !

0
பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பு - ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு !
பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பு - ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு !
பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பு – ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு !

ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்த சேவைக்கான கால அவகாசம் ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆதார் பான் இணைப்பு

தனி மனித அடையாள அட்டையாக இந்திய அரசால் வழங்கப்பட்ட ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு வருமான வரித்துறையால் பான் கார்டு மற்றும் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டு வந்தது. மத்திய அரசின் அறிவிப்பின் படி, ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்காக கடந்த வருடம் ஜூன் மாதம் முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.

N Job “FB  Group” Join Now

மத்திய அரசு அறிவித்த படி ஆதார் பான் இணைப்புக்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. நேற்று தான் கடைசி நாள் என்பதால் பொதுமக்கள் வருமான வரித்துறையினரின் www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தியுள்ளனர். இதனால் இந்த இணையதளம் முடங்கும் சூழல் ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் இந்த சேவைக்கான கால அவகாசத்தை மீண்டுமாக நீடிக்க வேண்டும் என கோரி வந்தனர். இதனால் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை – மீறினால் கடும் நடவடிக்கை!!

கொரோனா பரவலை காரணமாக கொண்டு இந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டதாக வருமான வரித்துறையினர் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த சேவையை பயன்படுத்தாத நபர்களுக்கு 1000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போதைய அறிவிப்பின் படி ஜூலை 1 ஆம் தேதிக்கு மேல் ஆதார், பான் எண்ணை இணைக்காதவர்களுக்கு 10,000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் பான், ஆதார் கார்டு இணைப்பு – எளிய வழிமுறைகள் இதோ!!

பான் கார்டுடன் ஆதார் இணைப்புக்கு வருமான வரித்துறையின் https://www.incometaxindiaefiling.gov.in/home என்ற இணையதள பக்கத்துக்கு செல்லவும். அதில் இடது பக்கம் இருக்கும் Quick Links என்ற ஆப்ஷனில் link Aadhaar என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில் தேவையான தகவல்கள் கேட்கப்படும். அதை பதிவு செய்த பிறகு check box என்பதை கிளிக் செய்து captcha குறியீட்டை பதிவு செய்து link aadhaar என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் இணைக்கப்பட்டு விடும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!