பாமாயில் , பட்டாணி விலை அதிகரிப்பு …!!! பருப்பு வகைகளின் விலை குறைப்பு…மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்…!!
விருதுநகர் சந்தையில் பாமாயில் , பட்டாணி மற்றும் பருப்பு வகைகளின் விலைகள் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அதில் சில மாற்றங்கள் ஏற்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது விருதுநகர் சந்தையில் எப்போதும் அத்தியாவசிய பொருட்களின் விலை பட்டியலை வாரம் தவறாமல் வெளியிடப்படும் . அதன் அடிப்படையில் இன்று விற்கப்படும் அத்தியாவசிய பொருட்களில் பாதி பொருட்களின் விலையை குறைத்து வியாபார சங்கங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்படும்..!! அதிர்ச்சியில் மதுபிரியர்கள் … டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி !!

அதாவது கடந்த வாரம் விருதுநகர் சந்தையில் 15 கிலோ பாமாயில் 1460 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 20 ரூபாய் உயர்ந்து இன்று 1480 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளை பட்டாணி இன்று 50 ரூபாய் உயர்ந்து 4250 முதல் 4350 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது மற்றும் பருப்பு வகைகளின் விலைகள் 200 முதல் 400 ரூபாய் குறைந்து சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது
அதனைத்தொடர்ந்து பாமாயில் , பட்டாணி விலை உயர்ந்து பருப்புகளின் விலை குறைந்துள்ளதால் வீட்டின் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



























