ஆன்லைன் விளையாட்டுகளுக்கான GST 28% ஆக உயர்வு – மத்திய அமைச்சர்கள் குழுவின் முடிவு!

0
ஆன்லைன் விளையாட்டுகளுக்கான GST 28% ஆக உயர்வு - மத்திய அமைச்சர்கள் குழுவின் முடிவு!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கான GST 28% ஆக உயர்வு - மத்திய அமைச்சர்கள் குழுவின் முடிவு!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கான GST 28% ஆக உயர்வு – மத்திய அமைச்சர்கள் குழுவின் முடிவு!

இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகள் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இந்த விளையாட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது குறித்து ஆலோசிக்க குழு அண்மையில் அமைக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது ஆன்லைன் விளையாட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி:

இந்தியாவில் மட்டும் மொத்தம் 400 ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் உள்ளது. இதில் சுமார் 40,000க்கும் மேற்பட்ட நபர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த விளையாட்டு இரண்டு வகைகளாக உள்ளது. ஒன்று Game of chance மற்றொன்று திறமையை பொருத்தது அதாவது Game of skill ஆகும். இந்த நிலையில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எவ்வளவு GST விதிப்பது என்பது பெரும் குழப்பமாகவே இருந்து வந்தது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

பிறகு 18% ஆக நிர்ணயம் செய்யப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மத்திய அரசு ஆன்லைன் விளையாட்டிற்கான ஜிஎஸ்டியை உயர்த்த முடிவு செய்தது. இது குறித்து ஆலோசிக்க ஜிஎஸ்டி கவுன்சிலில் அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கபட்டது. இந்த அமைச்சர் குழு தனது இறுதி கட்ட முடிவை தற்போது அறிவித்துள்ளது.

தமிழக அரசின் 2022 ஆம் ஆண்டிற்கான “டாக்டர் அம்பேத்கர் விருது” – மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்!

Exams Daily Mobile App Download

அதாவது இனி அனைத்து வகை ஆன்லைன் விளையாட்டிற்கும் 28% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனி கேசினோ மற்றும் குதிரை பந்தயம் போன்ற விளையாட்டுகளுக்கான ஜி.எஸ்.டியை 18 சதவிகிதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்கிறது. இந்த ஜிஎஸ்டி உயர்வால் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவோர்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!