ஆன்லைன் வகுப்பிற்கு தீபாவளி விடுமுறை !!! – மாணவர்கள் மகிழ்ச்சி

0
ஆன்லைன் வகுப்பிற்கு தீபாவளி விடுமுறை !!! - மாணவர்கள் மகிழ்ச்சி
ஆன்லைன் வகுப்பிற்கு தீபாவளி விடுமுறை !!! - மாணவர்கள் மகிழ்ச்சி

ஆன்லைன் வகுப்பிற்கு தீபாவளி விடுமுறை !!! – மாணவர்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் பயிலும் மாணவ மாணவியருக்கு தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வேலைவாய்ப்பு செய்திகள்

ஆன்லைன் வகுப்புகள் !

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. அடுத்த கல்வி ஆண்டு தொடங்கினாலும் தற்போது வரை ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழக அரசு பள்ளிகள் நவம்பர் 16ம் நாள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆனால் பெற்றோர்கள் தரப்பில் இதற்கு எதிர்ப்புகள் அதிகரித்ததால் பள்ளிகள் திறப்பிற்கான இந்த உத்தரவினை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது. இதன் காரணமாக மீண்டும் ஆன்லைன் வகுப்புகளின் மூலமாகவே மாணவர்கள் பாடங்களை கற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தீபாவளி விடுமுறை !

பள்ளிகள் செயல்பட்டு கொண்டிருந்தால் தீபாவளி விடுமுறை அறிவிக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறாது. ஆனால் தற்போது ஆன்லைன் வகுப்புகள் தான் நடைபெறுகிறது என்பதனால் விடுமுறை அளிக்கப்படுமா என்று மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் கிளம்பியது.

ஆனால் வழக்கம் போலவே மாணவர்களுக்கு தற்போது தீபாவளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நவம்பர் 12 (இன்று) முதல் நவம்பர் 16 வரை ஆன்லைன் வகுப்புகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!