ONGC நிறுவனத்தில் 27 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
ONGC நிறுவனத்தில் 27 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
ONGC நிறுவனத்தில் 27 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
ONGC நிறுவனத்தில் 27 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் (ONGC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டது. Junior Consultant / Associate Consultant ஆகிய பணிகள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளை (08.05.2023) இறுதி நாள் என்பதால் விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ONGC நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியான அறிவிப்பில், ONGC நிறுவனத்தில் Junior Consultant / Associate Consultant ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 27 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் ONGC நிறுவனத்தில் Drilling Field Operations பிரிவில் E3 / E5 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் குறைந்தது 05 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • இந்த ONGC நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 65 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.42,00/- முதல் அதிகபட்சம் ரூ.70,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • இந்த ONGC நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் Written Test மற்றும் Interview வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் (08.05.2023) வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.
Download Notification Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!