ONGC நிறுவனத்தில் மாதம் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது Associate Consultant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான ரயில்வேயில் இருந்து ஓய்வு பெற்ற நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் கீழே சரிபார்த்து உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் |
பணியின் பெயர் | Associate Consultant |
பணியிடங்கள் | 1 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 29.08.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிடங்கள்:
Ex-Railway Permanent Way Inspector Associate Consultant/Domain Expert பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
Consultant வயது வரம்பு:
இப்பணியின் நியமனத்தின் போது விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 70க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தகுதி விவரம்:
ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர், ரயில்வேயில் PWI (நிரந்தர வழி ஆய்வாளர்) ஆக குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
ONGC Consultant சம்பள விவரம்:
மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.66,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
AIASL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.23,640/- சம்பளம் !
ONGC தேர்வு செயல் முறை:
- எழுத்து தேர்வு
- நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 29.08.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.