பிரதமரின் X தள கணக்கை கையாளும் தமிழக விளையாட்டு வீரர்.. இந்த திடீர் நடவடிக்கைக்கான காரணம் என்ன..?
உலகம் முழுவதும் இன்று (08-03-2025) மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், மகளிர் தினம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டிருந்த பிரதமர் மோடி, மத்திய அரசு மகளிரின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் சாதனை படைத்த பெண்களின் கதைகள் மூலம் மற்ற பெண்களும் தங்களது சாதனை பயணத்தை தொடர ஊக்குவிக்கும் வகையில் ஒரு சிறப்பு முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதாவது, “மகளிர் தினத்தையொட்டி தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி இன்று (08-03-2025) ஒரு நாள் மட்டும் பிரதமர் மோடியின் எக்ஸ் பக்கத்தை கையாள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, அணுசக்தி ஆராய்ச்சியாளர் எலினா மிஸ்ரா, விண்வெளி ஆராய்ச்சியாளர் ஷில்பா சோனி மற்றும் பீகாரை சேர்ந்த தொழிலதிபர் அனிதா தேவி உள்ளிட்டோரும் பிரதமர் மோடியின் எக்ஸ் பக்கத்தில் தங்களின் வெற்றிப்பயணம் குறித்து பதிவிட்டு உள்ளனர் “என்பது குறிப்பிடத்தக்கது.
























