
வங்கி லாக்கர் பொருட்கள் காணாமல் போனால் யார் பொறுப்பு தெரியுமா…?? RBI வெளியிட்ட புதிய விதிமுறைகள் இதோ
மக்கள் தங்களின் கடின உழைப்பின் மூலம் சம்பாரித்த பணம், விலை உயர்ந்த நகைகள் மற்றும் மதிப்புமிக்க ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க வங்கி லாக்கர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். ஏனெனில், வங்கிகள் சிசிடிவி கேமராக்கள் மற்றும் அலாரம் போன்ற தகுந்த பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளது. அவ்வாறு, வங்கி லாக்கர்களில் தங்களுடைய பொருட்களை பாதுகாப்பாக வைத்திருப்பவர்கள், RBI ன் புதிய விதிமுறைகள் குறித்து தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.
பிரதமரின் X தள கணக்கை கையாளும் தமிழக விளையாட்டு வீரர்.. இந்த திடீர் நடவடிக்கைக்கான காரணம் என்ன..?
அதாவது, புதிய விதிகளில் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி லாக்கரில் நகைகள், சொத்து பத்திரங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை வைக்கலாம் என தெரிவித்துள்ளது. அதேபோல், ஆயுதங்கள், போதை பொருட்கள், வெடி பொருட்கள், சட்ட விரோத பொருட்கள், கதிரியக்க பொருட்கள் மற்றும் அழுகும் தன்மையுடைய பொருட்களை வைக்க கூடாது என்றும் அறிவித்துள்ளது. மேலும், வங்கி லாக்கரில் இருந்த பொருட்கள் சேதமடைதல், திருட்டு போதல், தீ விபத்து மற்றும் வங்கி ஊழியர்களின் மோசடி போன்ற முறையற்ற பாதுகாப்பு காரணங்களுக்கு வங்கியே பொறுப்பாகும் என்றும் தெரிவித்துள்ளது.


























