OLA S1 & S1 Pro எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் முதல் நாளில் ரூ.600 கோடிக்கு விற்பனை – CEO தகவல்!

1
OLA S1 & S1 Pro எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் முதல் நாளில் ரூ.600 கோடிக்கு விற்பனை - CEO தகவல்!
OLA S1 & S1 Pro எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் முதல் நாளில் ரூ.600 கோடிக்கு விற்பனை - CEO தகவல்!
OLA S1 & S1 Pro எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் முதல் நாளில் ரூ.600 கோடிக்கு விற்பனை – CEO தகவல்!

இந்தியாவில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை நேற்று (செப்டம்பர் 15) முதல் துவங்கியுள்ள நிலையில், அதன் முதல் நாளில் சுமார் ரூ.600 கோடிக்கு விற்பனையில் நடந்துள்ளதாக ஓலா தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

ஓலா விற்பனை

கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஒரு மாதம் கழித்து நேற்று (செப்டம்பர் 15) முதல் விற்பனைக்கு வந்துள்ளது. அந்த வகையில் ஓலா எஸ் 1 மற்றும் ஓலா எஸ் 1 ப்ரோ மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனையில் ஒரு புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. அதாவது ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஒரு நாளில் சுமார் ரூ.600 கோடி வசூலை அடைந்துள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் அறிவித்துள்ளார்.

செப்.17 முதல் ‘இந்த’ மாவட்டத்தில் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – ஆட்சியர் உத்தரவு!

அதாவது ஆன்லைன் விற்பனை துவங்கிய 24 மணி நேரத்தில், ஒரு நொடிக்கு நான்கு ஸ்கூட்டர்கள் என்ற அளவில் ஓலா வாகன விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ‘ஒவ்வொரு நொடியும் குறைந்தது நான்கு மின்சார ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவுகள் மேற்கொள்ளப்படுகிறது. அதனால் ஸ்கூட்டர்கள் தீர்ந்துவிடும் முன்பாக முன்பதிவுகளை விரைந்து செய்யுமாறு வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TANGEDCO வாரிய வேலைவாய்ப்பு 2021 – 10வது தேர்ச்சி!!!

மின்சார ஸ்கூட்டர்களை வாங்க செப்டம்பர் 16 கடைசி நாளாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இப்போது ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் அந்நிறுவனத்தின் இணையதளம் மூலம் ரூ.20,000 செலுத்தி முன்பதிவு செய்யலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக ஓலா எஸ் 1 அல்லது ஓலா எஸ் 1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள், ஸ்கூட்டர்களுக்கான பதிவு செய்யப்படுவதற்கு முன் எந்த நேரத்திலும் முன்பதிவை ரத்து செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் கொரோனா சிறப்பு விடுமுறை – மாநில அரசு அனுமதி!

அந்த வகையில் ஓலா எஸ் 1 ஸ்கூட்டர்கள் 121 கிமீ வரம்பு மற்றும் 90 கிமீ வேகத்தில் வருகிறது. ஓலா எஸ் 1 ப்ரோ 181 கிமீ வரம்புடன் 115 கிமீ வேகத்தை தருகிறது. இது தவிர ஓலா ஸ்கூட்டர்களில் AI செயல்பாடுகள், திருட்டு எதிர்ப்பு அமைப்பு, ஜியோ ஃபென்சிங் மற்றும் ஃபிளேம்-ரிடார்டன்ட் பேட்டரி ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!