விஜய் டிவி பிரபல சீரியலில் களமிறங்கும் ஆனந்தி – புது ட்விஸ்ட்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

0
விஜய் டிவி பிரபல சீரியலில் களமிறங்கும் ஆனந்தி - புது
விஜய் டிவி பிரபல சீரியலில் களமிறங்கும் ஆனந்தி - புது

விஜய் டிவி பிரபல சீரியலில் களமிறங்கும் ஆனந்தி – புது ட்விஸ்ட்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

விஜய் டிவியில் இதற்கு முன்னர் பல நிகழ்ச்சி மற்றும் தொடர்களில் நடித்து வந்த ஆனந்தி நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது புதிய சீரியலில் நடக்க தொடங்கியுள்ளார். இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.

புதிய அறிமுகம்:

விஜய் டிவியில் மதியம் 1 மணிக்கு பார்வையற்ற கதாநாயகனை சுற்றி நடக்கும் கதையாக ‘ராஜபார்வை’ என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் நாயகியாக ‘நாம் இருவர் நமக்கு இருவர்’புகழ் ‘தாமரை’ ராஷ்மி நடிக்கிறார். மேலும், விகாஷ் சம்பத், ஆர்த்தி ராம்குமார் போன்ற பிரபலங்களும் நடித்து வருகின்றனர். பார்வையற்ற நாயகனாக ஆனந்த் கதாப்பாத்திரத்தில் முனாஃப் ரஹ்மான் நடிக்கிறார். இவர்களுக்குள் நடக்கும் காதல் மற்றும் அன்பு பரிமாற்றம் போன்ற வடிவில் கதை சென்று வருகிறது.

அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் கொரோனா சிறப்பு விடுமுறை – மாநில அரசு அனுமதி!

இந்நிலையில், இந்த தொடரில் புதிதாக வான்மதி கதாபாத்திரத்தில் நடிகை ஆனந்தி நடிக்க இருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவர், முன்னதாக யமுனா, கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம், கனா காணும் காலங்கள், கார்த்திகை பெண்கள் உள்ளிட்ட சீரியல்களிலும், ரௌத்திரம், தாரை தப்பட்டை உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் ஜோடி, பாய்ஸ் Vs கேர்ள்ஸ், மானாட மயிலாட உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொண்டார். இவர் அஜய் என்பவரை திருமணம் செய்து கொண்டு நடிப்பதில் இருந்து விலகி இருந்தார்.

OLA S1 & S1 Pro எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் முதல் நாளில் ரூ.600 கோடிக்கு விற்பனை – CEO தகவல்!

தற்போது, மீண்டும் நடிக்க வந்திருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இவர், ராஜபார்வை தொடரில் இரண்டாவது நாயகியாக நடிப்பதாக தெரிவித்துள்ளார். ராஜபார்வை நாயகன் முனாப் தந்தி இன்ஸ்டாவில் ஆனந்தியை ராஜபார்வை குடும்பத்திற்கு வரவேற்பதாகவும், இவர் மூலம் கதையில் பல திருப்பங்கள் வர இருப்பதாகவும் தெரிவித்து ஷூட்டிங்கில் எடுத்துள்ள புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!