“அணு ஆயுதம் பயன்படுத்தி பதிலடித் தரப்படும்”…!! பாக். தூதரின் பேச்சால் சர்வதேச அளவில் பரபரப்பு..!!
கடந்த சில நாட்களுக்கு முன் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பரிதமாக 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு, பின்னணியில் பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்- இ – தொய்தா அமைப்பு உள்ளதாக இந்திய அரசு குற்றம் சாட்டியதை தொடர்ந்து, இரு நாடுகளின் எல்லைகளிலும் பதற்றம் அதிகரிக்க தொடங்கியது. மேலும், இரு நாடுகளும் எல்லைகளில் படைகளை குவித்து வரும் நிலையில், அனைத்து உலக நாடுகளும் இந்த பதற்றத்தினை தவிர்த்து அமைதியான முறையில் தீர்வு காண வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் நாளை (05.05.2025) முழுநேர மின்தடை அறிவிப்பு…!! முழு விவரம் உள்ளே..!!
இந்நிலையில், ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் முஹம்மது காலித் ஜமாலி, “இந்திய ராணுவம் தாக்கினால், அணு ஆயுதம் உள்ளிட்ட முழு பலத்தையும் பயன்படுத்தி பதிலடி தரப்படும்” என கூறியுள்ளார். இவரின் இந்த அடாவடி பேச்சு சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
























