நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு…தேசிய தேர்வு முகமை வெளியிட்ட முக்கிய அப்டேட்…!!
இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் போன்ற பல்வேறு மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவு தேர்வு அவசியமாகும். இதனை, தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்நிலையில், 2025 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு குறித்த அறிவிப்புகள் கடந்த பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி வெளியானது. இதனை தொடர்ந்து, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக மார்ச் 7 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நீட் நுழைவு தேர்விற்கு விண்ணப்பிக்க இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளதால், தேசிய தேர்வு முகமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, “கடைசி நேரத்தில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கும் வண்ணம், மாணவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு” அறிவுறுத்தியுள்ளது. மேலும், “தேசிய அளவில் வருகின்ற மே 4 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு ஓஎம்ஆர் முறையில் ஒரே நாளில் ஒரே கட்டமாக நீட் தேர்வு நடைபெற இருப்பதாகவும்” தெரிவித்துள்ளது.
























