UPI பயன்படுத்தும் யூசர்களின் கவனத்திற்கு.. இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அறிவித்த முக்கிய தகவல்..
எண்ணற்ற பல நன்மைகளை கொண்ட இந்த டிஜிட்டல் யுகத்தில் பெரும்பாலான நிதி பரிவர்த்தனைகள் UPI முறையை சார்ந்தே இருக்கிறது. மேலும், “யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்” (UPI), பயனர்கள் மற்றும் வணிகர்களிடையான நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது. இந்நிலையில் “ஃபோன்பே மற்றும் கூகுள் பே” போன்ற UPI நிறுவனத்திற்கு இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, ஃபோன்பே மற்றும் கூகுள் பே போன்ற UPI தளங்களுக்கான 30% சந்தை வரம்பை நடைமுறை செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், சந்தைப் பங்கு உச்சவரம்பு நவம்பர் 2020 இல் முதலில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து NPCI ஆனது “மூன்றாம் தரப்பு பயன்பாட்டு வழங்குநர்களுக்கு” (TPAP), மேலும் “இரண்டு ஆண்டு” கால அவகாசம் வழங்கியுள்ளது. இந்த கால நீடிப்பானது பல்வேறு UPI சேவை வழங்குநர்களுக்கு இடையே சமநிலையான சந்தைப் பங்கை உறுதி செய்வதற்காக “இந்திய வங்கிகள் சங்கத்தால் ” (IBA) வடிவமைக்கபட்டது என நிதி நிபுணர்கள் கூறுகின்றனர்.


























