
சட்டமன்றத் தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிப்பு…!! இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிரடி தகவல்…!!
முன்னதாக டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி 8, 2020 அன்று நடைபெற்றது, அதன் முடிவுகள் பிப்ரவரி 11, 2020 அன்று அறிவிக்கப்பட்டது. அதில் “அரவிந்த் கெஜ்ரிவால்” தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி (AAP), மொத்தமுள்ள 63 இடங்களை பிடித்து வெற்றி பெற்றது. மேலும், 2020 இல் உருவாக்கப்பட்ட இந்த சட்டமன்றத்தின் பதவிக்காலம் பிப்ரவரி, 2025 முடிவடைகிறது. இந்நிலையில் 2025-க்கான தேர்தல் தேதிகள், குறித்த முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, அரசியல் கட்சிகள் மற்றும் வாக்காளர்களிடையே டெல்லியில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தல் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் 2025 சட்டமன்றத் தேர்தலை, “பிப்ரவரி மூன்றாவது வாரத்தில்” நடத்த உள்ளதாக “இந்திய தேர்தல் ஆணையம்” (ECI) திட்டமிட்டு வருகிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி (AAP), பாஜக (BJP) மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைபுடன் போட்டி நிலவக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

























