இரயில்வே துறையில் 10ம் / 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – 50+ காலியிடங்கள்!

0
இரயில்வே துறையில் 10ம் / 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை - 50+ காலியிடங்கள்!
இரயில்வே துறையில் 10ம் / 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை - 50+ காலியிடங்கள்!
இரயில்வே துறையில் 10ம் / 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – 50+ காலியிடங்கள்!

இந்திய இரயில்வேயின் ஒரு பிரிவான வடகிழக்கு எல்லைப்புற இரயில்வேயில் 2023ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை விளையாட்டு வீரர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Level – 1 / 2 / 3 என்ற ஊதிய அளவுகளின் கீழ்வரும் Railway Officers பணியிடங்கள் காலியாக இருப்பதாக இதில் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Northeast Frontier Railway
பணியின் பெயர் Level – 1 / 2 / 3 Railway Officers (Sports Quota)
பணியிடங்கள் 51
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.10.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
இரயில்வே துறை காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், வடகிழக்கு எல்லைப்புற இரயில்வேயில் விளையாட்டு வீரர்கள் பிரிவில் Pay Matrix Level – 1 / 2 / 3 என்ற ஊதிய அளவுகளின் கீழ்வரும் பதவிகளுக்கென மொத்தமாக 51 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரயில்வே பணிகளுக்கான கல்வி தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு அல்லது ITI தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் விளையாட்டு துறை சார்ந்த தகுதிகளை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
இரயில்வே பணிகளுக்கான வயது வரம்பு:

01.01.2024 அன்றைய தினத்தின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 25 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

இரயில்வே பணிகளுக்கான ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு Pay Matrix Level – 1, 2, 3 என்ற ஊதிய அளவுகளின் படி, மாத ஊதியம் வழங்கப்படும்.

BECIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.34,500/- || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

NFR தேர்வு முறை:

Trial Test, Interview, Personal Assessment ஆகிய தேர்வு முறைகளின் வாயிலாக இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NFR விண்ணப்ப கட்டணம்:
  • SC / ST / Women / ESM / Minorities & Economically Backward Class – ரூ.250/-
  • மற்ற நபர்கள் – ரூ.500/-
NFR விண்ணப்பிக்கும் முறை:

இந்த இரயில்வே துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 23.10.2023 அன்றுக்குள் வந்து சேருமாறு விரைவு தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Form Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!