ரஷ்யாவுக்கு உதவிக்கரம் நீட்டும் வடகொரியா.. உக்ரைனுக்கு எதிராக மாறுமா?? விவரம் உள்ளே!!
உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த இரண்டரை வருடங்களாக போர் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால், அங்குள்ள பொதுமக்கள் பாதிப்படைந்து வருவதாக தகவல் வெளியாகின. மேலும், உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை .. அரசு அறிவிப்பு!!
இந்த பரபரப்பான சூழ்நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஒரு லட்சம் வீரர்களை அனுப்பி வைக்க வடகொரியா அதிபர் கிம் ஜாங் முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. மொத்தமாக படைகளைக் குவிக்காமல் சுழற்சி முறையில் அனுப்பி வைக்க இருப்பதாகவும் ஜி 20 ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது. தற்போது இத்தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.



























