ரூ.37,000/- ஊதியத்தில் NIT திருச்சி வேலைவாய்ப்பு – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

0
??.37,000/- ?????????? NIT ???????? ???????????? - ????? ?????, ???? ?????? ??????? ???? ????????????!
ரூ.37,000/- ஊதியத்தில் NIT திருச்சி வேலைவாய்ப்பு - கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

ரூ.37,000/- ஊதியத்தில் NIT திருச்சி வேலைவாய்ப்பு – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளி ஆனது JRF / Project Associate – I பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NIT காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி JRF / Project Associate – I பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

JRF கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE/B.Tech in ECE /  ME/M.Tech in Embedded System/VLSI/Signal Processing / MVSc / Master’s degree in Natural/Agricultural Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NIT வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

TANUVAS பல்கலைக்கழகத்தில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மூலம் தேர்வு!

JRF ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.30,000/- முதல் ரூ. 37,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIT தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து micaihlab@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.02.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!