
கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவோருக்கு ஜாக்பாட்…!! வெளியான அசத்தல் அறிவிப்பு…!! இனி உங்க காட்டுல மழை தான்…!!
பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்து தற்சார்ப்பு நிலையை அடைய வேண்டும் என்பதற்காக அரசானது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில், ஒன்றாக தமிழக அரசால் “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை” என்னும் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ 1000 உதவித்தொகையாக அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல பெண்களுக்கு அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
IPL 2025 : மே 25 ஆம் தேதிக்குள் தொடரை முடிக்க ஏற்பாடு…!! வீரர்களை மீண்டும் ஒருங்கிணைக்க அணிகளுக்கு BCCI அறிவுறுத்தல்..!!
இது தொடர்பாக, சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், புதிதாக இத்திட்டத்தில் இணைய விரும்புபவர்களுக்கான விண்ணப்பங்கள் வரும் ஜூன் மாதம் வழங்கப்பட்டு, அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட பின் அவர்களுக்கும் மாதந்தோறும் ரூ 1000 வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில், இந்த விண்ணப்ப விநியோகம் கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3 ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

























