என்னங்க சொல்றீங்க..!! இத பண்ணலேன்னா இன்சூரன்ஸ் பணம் CANCEL ஆகிடுமா..??
நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதாவது, தற்போதைய உலகில் சுகாதார செலவுகள் அதிகரித்து வருவதால், எதிர்பாராத விதமாக ஏற்படும் மருத்துவச் செலவுகளை ஈடுகட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் வைத்திருப்பது மிகவும் அத்தியாவசியமாக மாறியுள்ளது. அத்தகைய ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றி முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்களை பற்றி கீழ் விரிவாக காண்போம்.
1.முதலில் உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை சரிபார்த்து அதில் ஏதேனும் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளவும்.
2. மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்னரே இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நெட்வொர்க் அல்லாத ஹாஸ்பிட்டல்களில் பணமில்லா சிகிச்சை பெறுவதற்கு நீங்கள் முன்கூட்டிய அங்கீகரிப்பை பெற்றிருக்க வேண்டும்.
மக்களே..இனி கரண்ட் பில் கட்ட தேவையில்லை..அரசு அறிவிப்பு !! “வந்தாச்சு புதிய திட்டம்”..!!
3. இன்சூரன்ஸ் பாலிசியை கிளைம் செய்யும் போது, ஆதார் கார்டு , பான் கார்டு, மருத்துவ அறிக்கைகள், ரசீதுகள், மருத்துவரின் பிரிஸ்கிரிப்ஷன் மற்றும் பரிசோதனை முடிவுகள் ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.
4. அவசர கால சிகிச்சையின் போது இன்சூரன்ஸ் பணத்தை கிளைம் செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும்.
























