ICICI கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…!!கொண்டு வரப்பட்டது புதிய விதிமுறைகள்”..!!
தற்போதைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடுகள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. மேலும், இந்த கிரெடிட் கார்டுகள் மூலம் பல்வேறு சலுகைகளை நம்மால் பெற முடிகிறது. அந்த வகையில், ICICI கிரெடிட் கார்டு பயனாளர்களை அச்சுறுத்தும் வகையில், புதிய விதிமுறைகளை ICICI BANK அறிவித்துள்ளது. மேலும், இந்த அறிவிப்பின் மூலம், கிரெடிட் கார்டுகள் மூலம் மேற்கொள்ளப்படும் சலுகைகளில் கிடைக்கும் ரிவார்டுகள் மற்றும் பாயிண்டுகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பிரீமியம் கார்டுதாரர்கள் பயன்பாடு மற்றும் மருத்துவ காப்பீடுக்கு ரூ.80,000 வரை செலவழிக்கும் பட்சத்தில், 80,000 ரிவார்டு புள்ளிகளை பெறுவீர்கள் என்றும் மற்ற கார்டுதாரர்கள் பயன்பாடு மற்றும் மருத்துவ காப்பீடுக்கு ரூ.40,000 வரை செலவழிக்கும் பட்சத்தில், 40,000 ரிவார்டு புள்ளிகளை பெறுவீர்கள் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், இது குறித்த முழு விவரங்களை விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.
Follow our Instagram for more Latest Updates
அதாவது, பிரீமியம் கார்டுதாரர்கள் மளிகை பொருட்களை ரூ, 40,000- வரை மாத கொள்முதல் செய்தால், உங்களுக்கு ரிவார்டு வழங்கப்படும் எனவும் , மற்ற அட்டை தாரர்களுக்கு ரூ. 20,000 என்று மாத வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மாதம் வரம்பில் ரூ. 50,000 வரை கொள்முதல் செய்யும் பட்சத்தில், எரிபொருள் கூடுதல் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால். பிரத்யேக சிறப்பம்சங்களை கொண்ட எமரால்டு மாஸ்டர் கார்டு, மெட்டல் கார்டு தாரர்களுக்கு மாத வரம்பு 1 லட்சம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் பெண்களே லட்சாதிபதிகள்..!! அரசு செய்த அதிரடி செயல்..!!
மேலும், எமரால்டு கார்டின் செலவு வரம்பை மாற்றுவதற்கான வரம்பானது ரூ. 15 லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பள்ளி, கல்லூரிகளில் கட்டப்படும் கட்டணங்களுக்கு 1% உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இது நவம்பர் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


























