புதிய ரேஷன் கார்டு இன்னும் வரவில்லை – அதிருப்தியில் மக்கள்.. முதல்வரிடம் புகார்!

0
புதிய ரேஷன் கார்டு இன்னும் வரவில்லை - அதிருப்தியில் மக்கள்.. முதல்வரிடம் புகார்!
புதிய ரேஷன் கார்டு இன்னும் வரவில்லை - அதிருப்தியில் மக்கள்.. முதல்வரிடம் புகார்!
புதிய ரேஷன் கார்டு இன்னும் வரவில்லை – அதிருப்தியில் மக்கள்.. முதல்வரிடம் புகார்!

தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்யும் பணி சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயற்சித்துள்ளனர்.

ரேஷன் கார்டு:

தமிழகத்தில் தற்போது குடும்ப தலைவிகளுக்கு ரேஷன் கடைகள் வாயிலாக மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகளை உணவு வகைகள் துறை நிறுத்தி வைத்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அரசு உரிமைத் தொகை திட்டத்தை கொண்டு வந்ததும் புதிய ரேஷன் கார்டுகளை விநியோகம் செய்யும் பணியை நிறுத்தி விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவுள்ளதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தஞ்சை பெரிய கோயிலில் திடீர் கட்டுப்பாடு – முக்கிய அறிவிப்பு!

அத்துடன் ரேஷன் கார்டுகளில் புதிய பெயர் சேர்த்தல், உறுப்பினர்களின் பெயரை நீக்குதல் போன்ற எந்தவித பணிகளும் சில காலமாக நடைபெறவில்லை என்றும் கூறுகின்றனர். இது தொடர்பாக உணவு துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தற்போது பொதுமக்கள் முதல்வரின் தனி பிரிவில் புகார் அளித்து வருவதாக கூறியுள்ளனர். இதற்கு மத்தியில் உணவு வழங்கல் துறை அதிகாரிகள் ரேஷன் கார்டுகள் மீதான கள ஆய்வு விரைந்து நடத்தப்படும் ஆன்லைன் வாயிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் நம்பிக்கை அளித்துள்ளனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!