Airtel, Jio & Vi வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் குறித்த முழு விவரம் இதோ!

0
Airtel, Jio & Vi வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் குறித்த முழு விவரம் இதோ!
Airtel, Jio & Vi வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் குறித்த முழு விவரம் இதோ!
Airtel, Jio & Vi வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் குறித்த முழு விவரம் இதோ!

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை குறைந்தது 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.

ப்ரீபெய்ட் திட்டங்கள்

நாட்டின் மூன்று பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா அனைத்தும் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிவித்துள்ளன. அவை அனைத்தும் முழு காலண்டர் மாதத்திற்கு அதாவது 30 நாட்களுக்கு நீடிக்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வனத்துறையில் ரூ.1,00,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – முழு விவரம் இதோ!

இப்போது வரை, இந்த நிறுவனங்களின் பெரும்பாலான ‘மாதாந்திர’ ப்ரீபெய்ட் திட்டங்கள் 28 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் வகையில் கொடுக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ள புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

ரிலையன்ஸ் ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோ ஃப்ரீடம் திட்டத்தில் முதன்முறையாக 30 நாட்களுக்கு செல்லுடியாகும் ரூ.296 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டம் பயனர்களுக்கு அன்லிமிடெட் கால்ஸ், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 25 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது.

இது தவிர ரூ.209 திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் பயனர்களுக்கு அன்லிமிடெட் கால்ஸ், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒவ்வொரு நாளும் 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. தரவு ஒதுக்கீடு முடிந்ததும், தரவு 64Kbps ஆக குறைக்கப்படும். இந்த ஃப்ரீடம் திட்டங்கள் பயனர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தரவை மாதம் முழுவதும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்த அனுமதிக்கின்றன.

ஏர்டெல்:

ஏர்டெல் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் ரூ.296 ரீசார்ஜ் பேக்குடன் இணைந்து அன்லிமிடெட் கால்ஸ், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் மாதத்திற்கு 25 ஜிபி டேட்டா ஆகியவற்றை வழங்குகிறது. டேட்டா ஒதுக்கீடு முடிந்ததும், பயனர்களுக்கு ஒரு எம்பிக்கு 50 பைசா கட்டணம் விதிக்கப்படும். இதனுடன் ஏர்டெல் ரூ.319 திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது. இது 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் அன்லிமிடெட் கால்ஸ், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் தினசரி 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பயனர் தினசரி தரவு ஒதுக்கீட்டை முடித்தவுடன், அவர்களின் இணைய வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும்.

வோடபோன் ஐடியா:

வோடபோன் ஐடியா நிறுவனம் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.327 ரீசார்ஜ் பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயனர்களுக்கு அன்லிமிடெட் கால்ஸ், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் 25 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

Exams Daily Mobile App Download

மேலும், இந்த நிறுவனம் 31 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.337 திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் பயனர்களுக்கு அன்லிமிடெட் கால்ஸ், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் பேக்கின் செல்லுபடியாகும் காலம் முழுவதும் 28 ஜிபி டேட்டாவை வழங்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!