தமிழக வனத்துறையில் ரூ.1,00,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – முழு விவரம் இதோ!

0
தமிழக வனத்துறையில் ரூ.1,00,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - முழு விவரம் இதோ!
தமிழக வனத்துறையில் ரூ.1,00,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - முழு விவரம் இதோ!
தமிழக வனத்துறையில் ரூ.1,00,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – முழு விவரம் இதோ!

தமிழ்நாடு வனத்துறை ஆஃப்லைன் முறையில் Legal Advisor பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த தமிழ்நாடு வனத்துறை விண்ணப்பப் படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 04.06.2022 வரை கிடைக்கும். தமிழ்நாடு அரசுப் பணிகளில் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாமல் விண்ணப்பிக்கலாம்.

அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு:

அரசு வேலை என்பது ஒருவரது வாழ்க்கை லட்சியங்ளில் ஒன்று ஆகும். இருப்பினும் இந்த அரசு வேலை எளிய முறையில் கிடைக்காது, தமிழக அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் பல்வேறு போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பட்டு வருகிறது. கொரோனா காலகட்டத்தில் ஊடங்குகள் அறிவிக்கப்பட்டு இருந்ததால் அரசு மற்றும் அரசு சாரா வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகவில்லை. தற்போது கொரோனா கட்டுக்குள் வந்து உள்ளதால், மீண்டும் போட்டி தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு வனத்துறை ஆட்சேர்ப்பு 2022 தமிழக அரசு வேலைவாய்ப்பு 2022 பிரிவின் கீழ் வருகிறது. தமிழ்நாடு அரசு வனத்துறை வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதில் காலியாக உள்ள சட்ட ஆலோசகர் பணியிடங்கள் நிரப்ப உள்ளன. வனத்துறை பணிகளில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த Legal Advisor பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Legal Advisor பணிக்கென 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில அரிதான படிப்புகளுக்கு தேவை அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட சூழல் வனத்துறை பணியிடத்திற்கு உருவாகியுள்ளது. மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master of Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தபட்ட துறையில் 5 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TCS நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் – வாரத்தில் 3 நாட்கள் மட்டும் வேலை! சம்பளம் 8% வரை அதிகரிப்பு!

அதாவது Environment, Forest and Climate Change – சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான துறையில் 5 ஆண்டுகால முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.75,000 முதல் ரூ.1,00,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து Environment, Climate Change and Forest Department, Secretariat, Chennai-9. என்ற முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ இணையதளத்திற்கு (https://www.forests.tn.gov.in/ ) சென்று தெரிந்து கொள்ளலாம். ஜூன் 4ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!