ரயில் பயணிகளுக்கான சூப்பர் அறிவிப்பு – இனி வெயிட்டிங் லிஸ்ட் கிடையாது!!
வெயிட்டிங் லிஸ்ட்டில் பயணிகள் காத்திருக்க தேவையில்லாத வகையில் ரயில்வே நிர்வாகம் புதிய திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது.
ரயில்வே:
பேருந்துகளை காட்டிலும் ரயிலில் மிக குறைவான கட்டணம் என்பதால் பெரும்பாலான பயணிகள் ரயிலில் பயணம் செய்ய விரும்புகின்றனர். இதனால், ரயில் பயணத்திற்காக முன்பதிவு செய்யும் போது பயண டிக்கெட் உறுதி செய்யப்படாமல் வெய்டிங் லிஸ்டில் வைக்கப்படுகிறது. இதனால், பெரும்பாலான பயணிகள் டிக்கெட் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகின்றனர்.
தமிழக ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இல்லை – ஷாக் அறிவிப்பு!
இந்நிலையில், வெயிட்டிங் வைக்காமல் பயணிகள் நேரடியாகவே பயண டிக்கெட்டை உறுதி செய்யும் முயற்சியாக ரயில்வே துறை முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது, மக்கள்தொகை அதிகரிப்பிற்கு தகுந்தவாறு அடுத்த ஆண்டுகளில் 3000 புதிய ரயில்களை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே 200 முதல் 250 புதிய ரயில்களை இணைக்க வாய்ப்புள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.