இந்தியாவில் குழந்தை நட்சத்திரங்களுக்கு புதிய விதிமுறைகள் – NCPCR வெளியீடு!
இந்தியாவில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின் படி குழந்தை நட்சத்திரங்கள் கலைத்துறையில் பணிபுரியும் போது அவர்களுக்கு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை அறிவித்துள்ளது
விதிமுறைகள் அறிவிப்பு
இந்தியாவில் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு NCPCR எனப்படும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இயங்கி வருகிறது. இந்த ஆணையம் மூலமாக குழந்தைகளின் உரிமைகளை கவனித்து அவர்களை பாதுகாப்பதே பொறுப்பாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து விதிமுறைகள், திட்டங்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் நிர்வாக முகவர்களுக்கான குழந்தைகளை மையப்படுத்தி முறையை அடைய உதவும் முக்கிய அமைப்பாகும்.
IPL பிளே ஆப்காக 2 நாட்களுக்கு மெட்ரோ ரயில் இரவு 1 மணி வரை இயங்கும் – மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!
இந்நிலையில் இந்த அமைப்பில் இருந்து குழந்தை நட்சத்திரங்களாக நடித்து வரும் குழந்தைகளுக்கு சில விதிமுறைகள் வெளியாகி இருக்கிறது. அதன் படி ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள், நடிக்கவோ அல்லது ஊதியம் பெறக்கூடிய ஏதேனும் கலைதுறை தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தும் போது, அந்த குழந்தைகளின் பெற்றோரோ அல்லது அதிகாரபூர்வமான காப்பாளர்களோ அவர்களுடன் கட்டாயம் இருக்க வேண்டும் எனவும், குழந்தைகளை நடிக்க வைக்கும் போது அந்த மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் குழந்தைகளை தொடர்ச்சியாக 27 நாட்கள் வேளைகளில் ஈடுபடுத்தக் கூடாது எனவும், ஒரே நாளில் ஐந்து மணி நேரத்துக்கு மேல் குழந்தைகளை வேலை செய்ய வைக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் நடிக்க வரும் போது அவர்களுக்கு பள்ளிக்கு செல்ல எந்தவித சிக்கலும் வர கூடாது எனவும், குழந்தைகளின் கல்வி உறுதிசெய்யப்படும் விதமாக அவர்கள் படிப்பை சரியாக தொடர முடியாத விஷயம் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு ஏற்படக்கூடாது எனவும், சரியான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குழந்தை நட்சத்திரங்களின் இருபது சதவிகித சம்பளம், அவர்களது எதிர்காலத்திற்க்காக சம்பந்தப்பட்ட அக்குழந்தைகளின் நிலையான வைப்புத்தொகையாக செலுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download