
கோவையின் புதிய அடையாளமாக மாறப்போகும் கிரிக்கெட் மைதானம்..!! எங்கு அமையவிருக்கிறது என்று தெரியுமா..??
மக்களவைத் தேர்தலின்போது, கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். இதற்காக நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் இறுதியாக சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒண்டிப்புதூர் பகுதி தேர்வு செய்யப்பட்டு, இந்திய விமான நிலைய ஆணையத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் வாங்கப்பட்டது. இந்நிலையில் இந்த மைதானம் அமைப்பது தொடர்பான முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
G Pay, Paytm போன்ற UPI செயலிகளை பயன்படுத்துபவரா நீங்கள்..?? அப்போ உடனே இந்த விஷயங்களை மாத்திடுங்க..
அதாவது, “கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒண்டிப்புதூர் அரசு புறம்போக்கு திறந்தவெளி சிறைச்சாலையில் 28 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கும் திட்டத்திற்கான குறிப்புகளை, இந்தியா மற்றும் சர்வதேச கிரிக்கெட் மைதானங்களுடன் ஒப்பிட்டு அலோகசர்கள் முன்மொழித்துள்ளனர்” என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்டேடியம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.























