
சென்னை ஐஐடி யில் நாளை அகில இந்திய ஆராய்ச்சியாளர்கள் மாநாடு…!! ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தமிழகம் வருகை
நாடு முழுவதும் உள்ள பல்வேறு துறைகளின் ஆராய்ச்சியாளர்களை ஒன்றிணைக்கும் விதமாக சென்னை ஐஐடி யில் கடந்த 4 ஆம் தேதி அகில இந்திய ஆராய்ச்சியாளர்கள் மாநாடு ஒன்று நடைபெற்றது. அதில், பல்வேறு துறைகளின் ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை முன்வைத்தனர். அந்தவகையில், தற்போது மீண்டும் சென்னை ஐஐடி யில் அகில இந்திய ஆராய்ச்சியாளர்கள் மாநாடு நாளை (28.03.2025) நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொள்ள ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நாளை தமிழகம் வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதை ஐஐடி யின் விவகார குழுமம் தலைமையேற்று நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கல்லூரி மாணவர்கள் பல்வேறு துறைகளில் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ஊக்குவிக்கும் வகையில், மற்ற நாடுகளின் ஆராய்ச்சியாளர்களை ஒன்றிணைப்பதற்கு இந்த மாநாட்டை நடத்த இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.























