NEET PG 2023 தேர்வு முடிவுகள் வெளியீடு – பதிவிறக்கம் செய்வது எப்படி?

0
NEET PG 2023 தேர்வு முடிவுகள் வெளியீடு - பதிவிறக்கம் செய்வது எப்படி?
NEET PG 2023 தேர்வு முடிவுகள் வெளியீடு - பதிவிறக்கம் செய்வது எப்படி?
NEET PG 2023 தேர்வு முடிவுகள் வெளியீடு – பதிவிறக்கம் செய்வது எப்படி?

முதுகலை மருத்துவப்படிப்புகளுக்கான NEET PG நுழைவுத்தேர்வு முடிவுகள் இன்று (மார்ச் 14) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இருந்து தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தேர்வு முடிவுகள் வெளியீடு

இந்தியாவில் மருத்துவம் படிக்க விரும்புபவர்கள் NEET எனப்படும் நுழைவுத்தேர்வை எழுத வேண்டியது அவசியம் ஆகும். அந்த வகையில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான NEET UG தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) நடத்துகிறது. அதே போல, முதுகலை படிப்புகளுக்கான NEET PG நுழைவுத்தேர்வை தேசிய தேர்வு வாரியம் நடத்துகிறது.

Follow our Instagram for more Latest Updates

அந்த வகையில், வரும் 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு இம்மாதம் 5 ஆம் தேதியன்று நடத்தப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, NEET PG 2023 தேர்வுக்கான முடிவுகள் இன்று (மார்ச் 14) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, NEET PG தேர்வுக்கு தோன்றிய விண்ணப்பதாரர்கள் https://natboard.edu.in/ மற்றும் https://nbe.edu.in. என்ற இணையதளம் மூலம் முடிவுகளை சரிபார்க்கலாம்.

SSC CGL தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – விடைக்குறிப்பு வெளியீடு!

இப்போது, பொது மற்றும் EWS மாணவர்கள் MD/MS/DNB/டிப்ளமோ படிப்புகளுக்கு 291 என்ற அடிப்படையில் கட்ஆப் மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, பொது மற்றும் PwBD மாணவர்கள் 274 கட்ஆப் மதிப்பெண்கள் மற்றும் SC/ST/ OBC மாணவர்கள் மாணவர்கள் 257 மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்வது எப்படி?

முதலில் https://natboard.edu.in/ மற்றும் https://nbe.edu.in அதிகாரப்பூர்வ இணையதளத்தை திறக்கவும்.
அங்கு, NEET PG 2023 ரிசல்ட் தொடர்பான இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும்.
அதனை கிளிக் செய்து தேவையான விவரங்களை உள்ளிடவும்.
தேர்வு முடிவு விவரங்கள் திரையில் தோன்றும்.

OFFICIAL NOTICE

DOWNLOAD RESULT

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!