
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (06.03.2025) கடைசி நாள்…தேர்வர்களுக்கு NTA வெளியிட்ட முக்கிய தகவல்
நீட் நுழைவுத் தேர்வானது எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு மிக முக்கியமான தேர்வாகும். மேலும், இத்தேர்வை நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (NTA) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்நிலையில், நடப்பாண்டிற்கான நீட் நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்க நாளை (07.03.2025) வெள்ளிக்கிழமை அன்று இரவு 11.50 மணியுடன் நிறைவடைகிறது.
மக்களே..தமிழ்நாடு அரசின் இலவச இருசக்கர வாகனம் வேணுமா..?? விண்ணப்பிக்கும் முறை இதோ
எனவே, நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் https://neet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விரைந்து விண்ணப்பிக்குமாறு NTA அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், நீட் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்கள் வருகின்ற மார்ச் 9,10 மற்றும் 11 ஆகிய மூன்று தேதிகளில் விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். மேலும், வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி மாணவர்களுக்கான தேர்வு மையத்தையும், வருகின்ற மே 1 ஆம் தேதி தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

























