நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது – முழு விவரங்களுடன்!
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பில் பெறப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான சீட்டுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. நீட் தேர்வு குறித்து பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் இருந்து வரும் நிலையில் தேர்வு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 4ம் தேதி நேரடி முறையில் நடைபெற உள்ளது.
இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்ப பதிவு இன்று (பிப்.7) மாலை முதல் தொடங்கியது. தகுதியான மற்றும் விருப்பமுள்ளவர்கள் neet.nta.nic.in என்ற வலைத்தளம் வழியாக மார்ச் 7-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 3 மணி நேரம் 20 நிமிடம் நடைபெறும் தேர்வுக்கான ஹால்டிக்கெட் மே 1 ஆம் தேதி மற்றும் அதன் முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

























