SMS மூலமாக நடைபெறும் புதிய வகை மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு!
உங்களது மொபைல் எண்ணிற்கு KYC ஆவணங்களை பதிவேற்றம் செய்யாமல் உள்ளதால் உங்களது சிம் கார்டு செயல்படாமல் போகும் என வரும் SMSகள் போலியானவை என எச்சரிக்கை அறிவிப்பை இந்திய செல்லுலார் ஆபரேட்டர்ஸ் அசோசியேஷன் வெளியிட்டுள்ளது.
எச்சரிக்கை அறிவிப்பு:
ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ அல்லது விஐ போன்ற எந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு சமீபத்தில் SMS மூலமாக பல மோசடி நடைபெறுவதாக புகார்கள் பதிவாகி வருகிறது. KYC ஆவணங்கள் இல்லாததால் உங்களது சிம் கார்டு சில மணி நேரங்களில் செயலிழந்து போகும் என்பதே அந்த குறுஞ்செய்தி ஆகும். இந்த மோசடி அழைப்புகள் சந்தேகத்திற்கு இடமின்றி பயனர்களின் ஆதார் போன்ற அடையாள ஆவணங்களை பதிவேற்ற தங்கள் தொலைபேசியில் மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றன.
இன்று முதல் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு – தீவிரமடையும் கொரோனா பாதிப்பு!
அதன் மூலம் உங்களது KYC விவரங்களை பெற்று மோசடி செய்கின்றனர். ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ அல்லது விஐ உட்பட எந்த மொபைல் சேவை வழங்குநரின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு நிறுவனங்களிலிருந்து வரும் அழைப்புகள் இது அல்ல என்று பயனர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியை இந்திய செல்லுலார் ஆபரேட்டர்ஸ் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. அவ்வாறு அனுப்பப்படும் SMS மூலமாக அத்தகைய எந்த பயன்பாட்டையும் பதிவிறக்கம் செய்யவோ அல்லது அறியப்படாத அழைப்பாளர்களுடன் எந்த அடையாள ஆவணங்களையும் பகிரவோ கூடாது என தொடர்ந்து எச்சரித்து வருகிறது.
TN Job “FB
Group” Join Now
சிம் கார்டுகள் செயலிழக்கப்படும் என்ற பயம் காரணமாக பலர் KYC குறித்த விவரங்களை வழங்கி வருகின்றனர். அதனால் அவர்கள் தங்களது பணத்தை இழந்து தவித்து வருகின்றனர். பெரும்பாலான நேரங்களில், மொபைல் சேவை வழங்குநர்கள் நிலுவையிலுள்ள அல்லது முழுமையற்ற KYC முறைகளை முடிக்க ஒரு பயனரை அதிகாரப்பூர்வ பயன்பாட்டைப் பயன்படுத்தி KYC அப்டேட்டை மேற்கொள்ள செய்வார்கள். அதற்கு பதிலாக மூன்றாம் தரப்பு செயலியை பதிவிறக்கம் செய்து ஆவணங்களை பதிவேற்றம் செய்ய கேட்கமாட்டார்கள். இந்த மோசடி SMS களிடம் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த செய்திகள் அல்லது அழைப்புகளுக்கு பதிலளிக்க கூடாது.