தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ட்விட்டர் முகப்பு பக்கம் மாற்றம்!!

1
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ட்விட்டர் முகப்பு பக்கம் மாற்றம்!!
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ட்விட்டர் முகப்பு பக்கம் மாற்றம்!!
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ட்விட்டர் முகப்பு பக்கம் மாற்றம்!!

தமிழகத்தில் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள்
தனது ட்விட்டர் முகப்பு பக்கத்தை மாற்றியுள்ளார். அதில் இனி தமிழகம் வெல்லும் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

முகப்பு பக்கம் மாற்றம் :

கடந்த மாதம் ஏப்ரல் 6ம் தேதி தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் சிறப்பாக நடைபெற்றது. கொரோனா பரவல் மத்தியில் பல்வேறு கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடந்து முடிந்தது. இதன் முடிவுகள் மே 2 ம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதன் படி மே 2  காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட்டது.

TN Job “FB  Group” Join Now

இதில் திமுக அமோக வெற்றி பெற்றனது. இதனை தொடர்ந்து திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று காலை தமிழக முதல்வராக பதவியேற்றார். ஆளுநர் பன்வாரிலால் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவரை தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். பதவியேற்பு விழாவானது ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அதில் முதலமைச்சரும், அமைச்சர்களும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை – அறிவிப்பு வெளியீடு!!

அங்கிருந்து சென்ற ஸ்டாலின் அவர்கள் தனது தந்தையின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதையை செய்தார். பிறகு தனது இல்லத்திற்கு சென்று தாயாரிடம் ஆசிபெற்றார். இதனை தொடர்ந்து ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் முகப்பு பக்கத்தில் மாற்றம் செய்துள்ளார். அதில் தமிழக முதலமைச்சர் திமுக தலைவர் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இனி தமிழகம் வெல்லும் என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!