
2025 பட்ஜெட்டில் ஏற்பட்ட புதிய திருப்பம்.. மத்திய அமைச்சகம் வெளியிட்ட அதிரடி தகவல்.. அதிர்ச்சியில் மக்கள்..
டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் தற்போது 2025-26 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இக்கூட்டத்தொடரில் பல்வேறு துறைகளில் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசு ஆனது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை உயர்த்த உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
Today Gold Rate: சென்னையில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை…!! இன்னைக்கு கோல்ட் ரேட் எவ்ளோ தெரியுமா…??
அதாவது, “முன்னாள் எம்.பி.களின் சம்பளம், தினசரி அலவன்ஸ் மற்றும் ஓய்வூதியங்களை சுமார் 24 சதவீதம் உயர்த்திவுள்ளதாக நாடாளுமன்ற விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், முன்னதாக எம்.பி.க்களுக்கு ரூ.1 லட்சம் மாத ஊதியம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.1.24 லட்சமாகவும் , தினசரி அலவன்ஸ் ரூ.2000 இருந்து, ரூ.2500 ஆகவும் மற்றும் ஓய்வூதியமானது ரூ. 21,000 இருந்து ரூ.31,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம் ஆனது 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பணவீக்கக் குறியீட்டின் அடிப்படையின் கீழ் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் 1, 2025 தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது”.























