
EPFO செயல் முறையில் புதிய மாற்றம்.. இனி ஊழியர்கள் கவலைப்பட தேவையில்லை.. மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவல்..
அடுத்தகட்ட போராட்டத்தை அறிவித்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர்…!! அரசுக்கு ஒரு வாரம் காலஅவகாசம் அறிவிப்பு
அதாவது, “தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, EPF-ல் PF வித்ட்ராவல் தொடர்பான கிளைம்கள் 60 சதவீதம் ஆட்டோமேட்டிக் சிஸ்டம் மூலம் தீர்வு செய்யப்பட்டுள்ளது என்றும், இதனால் நடப்பு நிதியாண்டில் 2.16 கோடி கோரிக்கைள் நிவர்த்தி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, ஆட்டோமேட்டிக் சிஸ்டம் மூலம் செய்யப்படும் வித்ட்ராவல் இனி மூன்றே நாட்களில் கிளைம் செட்டில்மெண்ட் செய்யப்படும் என்றும், UAN உடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ள PF கணக்கு வைத்திருப்பவர்கள் EPFO-இன் தலையீடு இல்லாமல் தங்களது விவரங்களில் ஏற்பட்ட தவறுகளை திருத்தும் பணியும் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக ஷோபா கரந்த்லாஜே தெரிவித்துள்ளார்”. மேலும், மருத்துவமனை செலவுகள், வீடு கட்டுதல், மேற்படிப்பு, திருமணம் தொடர்பான ஆட்டோமேட்டிக் சிஸ்டம் PF வித்ட்ராவலின் வரம்பு ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

























