
“காற்று மாசுபாட்டை குறைக்க மின்சார பேருந்துகள் இயக்கப்படும்”… சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்..
கடந்த டிசம்பர் 2024 ஆம் ஆண்டு சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் புதிதாக 500 தாழ்தள மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான டெண்டர் தமிழ்நாடு அரசு தரப்பில் விடுக்கப்பட்டது . மேலும், பிப்ரவரி 5, 2025 ஆம் தேதி வரை டெண்டருக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மின்சார பேருந்துகளின் செயல்பாடு தொடர்பாக முக்கிய செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, சென்னையில் காற்று மாசுபாட்டை, கணிசமாக குறைக்க மின்சார பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர சென்னை மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், “2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் 625 புதிய மின்சார பேருந்துகளை வாங்கவும், டபுள் டெக்கர் பேருந்துகளை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராயப்பட்டு வருவதாகவும் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்”.

























