சென்னை மட்டுமில்லை தமிழகம் முழுவதும் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் கணிப்பு!!

0
சென்னை மட்டுமில்லை தமிழகம் முழுவதும் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் கணிப்பு!!

தமிழ்நாட்டில் சில நாட்களாக கனமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னையை தொடர்ந்து நேற்று பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. பல ஊர்களில் மரங்கள் உடைந்து விழுந்தும், மழைநீர் தேங்கியும் மக்களுக்கு போக்குவரத்து நெரிசலை உண்டாக்கின. இதைத் தொடர்ந்து, நேற்று இரவு மீண்டும் சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது. இன்றும், தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தங்கத்தின் விலை மீண்டும் குறைவா..?நம்பலாமா..நம்பக்கூடாதா..?

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், மதுரை, விழுப்புரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திண்டுக்கல், தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், வேலூர், புதுக்கோட்டை, திருவள்ளூர், சிவகங்கை மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்து கூறியுள்ளார்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!