என்ன சொல்றீங்க.. காய்கறி விலை அதிகரிப்பா..?
நமது அன்றாட வாழ்வில் காய்கறி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்..சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய காய்கறிகள் அதிகம் உள்ளன. மற்ற உணவுகளை விட காய்கறிகளில் அதிகமான சத்துக்கள் உள்ளன.ஆனால் அது நம்மில் பல பேருக்கு தெரியாமல் உடம்பிற்கு தீங்கு தரக்கூடிய உணவுகளை சாப்பிட்டு கொண்டு இருக்கிறோம் .அத்தகைய காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் ஏற்றத்தாழ்வுடன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன,அதன்படி இன்றைய நிலவரத்தை காண்போம் வாருங்கள்.
இன்றைய விலை நிலவரம் :
இன்றைய நிலவரப்படி சென்னை கோயம்பேடு சந்தையில் 1 கிலோ அவரைக்காய் 40 ரூபாய்க்கும்,பீன்ஸ் 1 கிலோ 60 ரூபாய்க்கும்,பீட்ரூட் 1 கிலோ 50 ரூபாய்க்கும்,கத்தரிக்காய் 1 கிலோ 60 ரூபாய்க்கும் மற்றும் கேரட் 1 கிலோ 110 ரூபாய்க்கும் ,முருங்கைக்காய் 1 கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது .
தங்கத்தின் விலை மீண்டும் குறைவா..?நம்பலாமா..நம்பக்கூடாதா..?
அதேபோல் இஞ்சி 1 கிலோ 130 ரூபாய்க்கும்,வெண்டைக்காய் 35 ரூபாய்க்கும் ,சின்ன வெங்காயம் 60 ரூபாய்க்கும் ,1 கிலோ உருளைக்கிழங்கு 42 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


























