மஞ்சளா இருந்தா மஞ்சள் காமாலையா ..? இது என்னடா புது question ஆஹ் இருக்கு..?
பொதுவாக ஒரு மனிதனின் உடலில் கல்லீரல் என்பது மிகவும் முக்கியமான ஒரு உள் உறுப்பாகும். அத்தகைய கல்லீரல் உடலில் வளர்சிதை மாற்றங்களினால் ஏற்படும் நச்சுத்தன்மையை அகற்றுதல் மற்றும் செரிமானத்திற்கு தேவையான உயிர் வேதியியல் பொருட்களை உற்பத்தி செய்தல் போன்ற பல்வேறு முக்கியமான வேலைகளை செய்து வருகிறது. இத்தகைய, கல்லீரலில் பாதிப்புகள் ஏற்பட்டதற்கான முதல் அறிகுறிதான் மஞ்சள் காமாலை. “ஹெப்படைட்டிஸ்” கிருமி தொற்றால் ஏற்படக்கூடிய மஞ்சள் காமாலை காலப்போக்கில் உயிரை பறித்து விடக்கூடிய கொடிய நோயாக மாறிவிடும். இதனால், முதல் அறிகுறிகள் தோன்றினாலே அதற்கான மருத்துவ சிகிச்சையை பெற்று கொள்வது நல்லது.
JIO நிறுவனத்தின் புதிய சேவை.. அறிமுக சலுகையாக 100 GB வரை இலவச Storage.. முழு விவரம் உள்ளே!!
அறிகுறிகள்:
1. தோள் மற்றும் கண்களில் நிறங்கள் மஞ்சள் நிறத்தில் மாறும்
2.வாந்தி
3. காய்ச்சல்
4.இருண்ட நிற சிறுநீர்
5.வெளீர் நிற மலம்
6. பசியின்மை
7.கல்லீரல் பகுதியில் வயிற்று வலி
8. பசியின்மை
மஞ்சள் காமாலையை சரி செய்யும் முறை:
மஞ்சள் காமாலையின் அறிகுறிகள் தென்பட்ட உடனே மருத்துவரை அணுகி அதற்கு தேவையான சிகிச்சைகள் எடுத்துக் கொண்டால் இந்த நோயிலிருந்து நம்மை சுலபமாக பாதுகாத்து கொள்ளலாம் என்று மருத்துவர்களால் கூறப்படுகிறது.
























