IOB-ல் ரூ.15,000 உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு..!! ஆன்லைன் தேர்வு..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) ஆனது 550 பயிற்சியாளர்கள் பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்து தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் 10.09.2024-க்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வேலைவாய்ப்புக்கான விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது
IOB காலிப்பணியிடங்கள்:
IOB நிறுவனத்தில் 550 பயிற்சியாளர்கள் காலிப்பணியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.
IOB கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 10.09.2024 தேதியின் படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
DFCCIL ஆணையத்தில் Junior Manager காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுத தேவையில்லை || உடனே விரையுங்கள்!
ஊதிய விவரம் :
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ 10,000- ரூ.15,000 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை;
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் IOBயின் அதிகாரப்பூர்வ இணையதளமான iob.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 07.09.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
























