மாசற்ற மனிதர் மன்மோகன் சிங்கிற்கு அமையும் நினைவிடம்..!! ” மத்திய அமைச்சர் உறுதி”..!!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மற்றும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமாக இருந்த டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் உடல்நல குறைவு காரணமாக நேற்றைய முன்தினம்(26.12.2024) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர், இருப்பினும் வயோதிகம் காரணமாக நேற்றைய முன்தினம் இரவு 9.51 மணி அளவில் இயற்கை எய்தினார். மேலும், மாசற்ற மனிதரான மன்மோகன் சிங் மறைவுக்கு பிரதமர் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
அதன்படி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி சடங்கு இன்று(28.12.2024) நடைபெறுகிறது. இந்நிலையில், இந்தியாவிற்கு அயராது பணியாற்றிய மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்குமாறு காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதை தொடர்ந்து, “முன்னாள் பிரதமருக்கு நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்கப்படும். ஆனால், இதற்கான பணிகள் தொடங்கும் வரை இறுதி சடங்குகளை தொடங்கலாம்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.


























