என்னப்பா சொல்றீங்க.. அரசு பேருந்துகளில் ஏர் ஹோஸ்டஷா?? இது நம்ம லிஸ்டிலேயே இல்லை!!
இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில், விமானங்களில் இருக்கும் CABIN CREW போல அரசு பேருந்துகளில் பணிப்பெண்களை நியமித்து பயணிகளை கவர அம்மாநில அரசு ஒரு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இயக்கப்படும் அரசு சிவ்னெரி எலெக்ட்ரிக் சொகுசு பேருந்துகளில் மட்டும் பணிப்பெண்களை நியமனம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
வங்கிகளில் இனி ரோபோ தான் அதிகாரி..!! இந்திய ஓவர்சீஸ் வங்கி தகவல்
முதற்கட்டமாக மும்பை மற்றும் புனே வழித்தடத்தில் இயங்கும் பேருந்துகளில் ‘ஷிவ்நேரி சுந்தரி’ என்ற பெயரில் பணிப்பெண்களை அமர்த்தவுள்ளனர். இப்பெண்கள், பயணிகள் பேருந்துகளில் ஏறும்போது அவர்களை வரவேற்பதற்கும், பயணத்தின்போது பயணிகளுக்கு உதவுவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


























