மதுரை – பெங்களூர் வந்தே பாரத் ரயில் சேவை.. இம்மாத இறுதியிலிருந்து தொடக்கம்!!
மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு இடையே தனது பயண சேவையை வழங்கி வருகிறது. குறைவான நேரத்தில் அதிக வசதிகளுடன் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் வந்தே பாரத் ரயில் சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது.
TET தேர்வுக்கு பயிற்சி ஆரம்பம் – குறைந்த கட்டணம் ..!!! அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
இந்நிலையில் தற்போது தெற்கு ரயில்வே வாரியம் ஆனது அதிகாரப்பூர்வமாக மதுரை – பெங்களூர் மற்றும் நாகர்கோயில் – சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவைகளை இம்மாத இறுதியில் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.


























