ஏப்ரல் 27 முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு!!
கர்நாடகா மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது அம்மாநில அரசு.
முழு ஊரடங்கு:
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. என்றாலும் நாளொன்றுக்கு மூன்று லட்சம் பேர் நோய் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த ஆண்டை போல பலி எண்ணிக்கையும் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திலும் நோய் தாக்கத்தினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
TN Job “FB
Group” Join Now
அங்கு நேற்று ஒரு நாளில் மட்டும் 34,804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 143 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக கொரோனா பரவல் காரணமாக கர்நாடகாவில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் இரவுநேர ஊரடங்குடன், வார இறுதியில் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்த பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட காலத்தில் மக்களின் அன்றாட தேவைகள் தவிர பிற அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
மாலத்தீவிற்குள் நுழைய இந்திய பயணிகளுக்கு தடை – ஏப்ரல் 27 முதல் அமல்!!
இந்த கட்டுப்பாடுகள் மே 4 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 14 நாட்களுக்கு தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி நாளை ஏப்ரல் 27 இரவு 9 மணி முதல் இந்த முழு ஊரடங்கு மக்கள் நடைமுறைக்கு வருகிறது. தொடர்ந்து காலை 5 மணி முதல் 10 மணி வரை அத்தியாவசிய பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Super