அரசு ஊழியர்களுக்கு பாரபட்சம் காட்டும் தமிழக அரசு.. பார்முலா 4 கார் பந்தயம் தேவையா?- மீண்டும் வழக்கு!

0

தமிழக அரசு மீது டிஎன்பிஎஸ்சி முன்னாள் முன்னாள் உறுப்பினர் ஒருவர் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். அது குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

வழக்கு விவரம்

தமிழகத்தில் முன்னாள் உறுப்பினர் பாலுசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருக்கிறார். அதில் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அவர்களுக்கு அரசிடம் நிதி இல்லை என விளக்கம் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசு பார்முலா 4 கார் பந்தயத்திற்கு ரூ.40 கோடி நிதி ஒதுக்கி இருக்கிறது. இந்த பந்தயம் நடத்த ஒப்புதல் கேட்கவில்லை எனவும், இந்த பந்தயம் வேண்டும் என யாரும் கோரிக்கை வைக்கவில்லை என வழக்கு குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் ஏழை குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு – காங்கிரஸ் எம்பி அறிவிப்பு!

மேலும் இந்த வழக்கில், தீவுத்திடலை சுற்றி உள்ள சாலையில் பந்தயம் நடத்துவதால் சிறிது கவனக்குறைவு ஏற்பட்டாலும் உயிரிழப்பு ஏற்படும். அதனால் இந்த பந்தயத்தை இருங்காட்டுக் கோட்டை வளாகத்தில் நடத்தினால் தேவை இல்லாத செலவு ஏற்படுவதை தடுக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த மனுவை அவசர வழக்காக வியாழன் அன்று விசாரிக்கக் கோரி நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையிடப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக உத்தரவிட்டனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!