3 முதல் 9, 11 ஆம் வகுப்புகளுக்கான இறுதித் தேர்வுகளின் அட்டவணை வெளியீடு!!

0
3 முதல் 9, 11 ஆம் வகுப்புகளுக்கான இறுதித் தேர்வுகளின் அட்டவணை வெளியீடு!!
3 முதல் 9, 11 ஆம் வகுப்புகளுக்கான இறுதித் தேர்வுகளின் அட்டவணை வெளியீடு!!
3 முதல் 9, 11 ஆம் வகுப்புகளுக்கான இறுதித் தேர்வுகளின் அட்டவணை வெளியீடு!!

கேந்திரியா வித்யாலய சங்கதன் (கே.வி.எஸ்) தனது கால-இறுதித் தேர்வை 2021 மார்ச் 1 முதல் நடத்துவதாக அறிவித்துள்ளது. 3 முதல் 9 மற்றும் 11 வகுப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 1 முதல் 20 வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இறுதித்தேர்வு அட்டவணை:

கேந்திரியா வித்யாலய சங்கதன் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில், தேர்வின் முழுமையான அட்டவணையை வெளியிட்டுள்ளது. 3 முதல் 9 மற்றும் 11 வகுப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 1 முதல் 20 வரை நடத்தப்படும். தேர்வு ஆன்லைன் மற்றும் ஆப்லைன் முறையில் நடைபெறும். இணைய வசதி மற்றும் ஆன்லைன் தேர்வுக்கு உரிய சாதனங்கள் இல்லாத மாணவர்களுக்கு மட்டுமே நேரடியாக (ஆப்லைன்) தேர்வு நடத்தப்படும். 9 மற்றும் 11 வகுப்புகளுக்கு, தேர்வுகள் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி ஆப்லைன் முறையில் நடத்தப்படும்.

பிப்ரவரி 1 முதல் 9, 11 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

3 முதல் 5 ஆம் வகுப்பு வரை, தேர்வுகள் 40 மதிப்பெண்களாகவும், வினாத்தாளில் 10 மதிப்பெண்களின் மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் (MCQ) இருக்கும். விளக்கமான கேள்விகள் மற்றும் வாய்மொழி கேள்விகளுக்கு தலா 15 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

6 முதல் 8 வகுப்புகளுக்கு, தேர்வுகள் 80 மதிப்பெண்களாகவும், வினாத்தாளில் 25 மதிப்பெண்களின் மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் (MCQ) இருக்கும். விளக்கமான கேள்விகள் மொத்தம் 40 மதிப்பெண்கள் கேட்கப்படும், மற்றும் வாய்வழி கேள்விகள் 15 மதிப்பெண்களைக் கொண்டிருக்கும்.

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புதல் – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

9 மற்றும் 11 வகுப்புகளின் வினாத்தாள் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பின்பற்றப்பட்ட சிபிஎஸ்இ முறைகளின்படி இருக்கும். தேர்வின் காலம் 3 முதல் 5 வகுப்புகளுக்கு ஒரு மணி நேரமாகவும், 6 முதல் 8 வகுப்புகளுக்கு இரண்டு மணி நேரமாகவும், 9 மற்றும் 11 மாணவர்களுக்கு மூன்று மணி நேரமாகவும் இருக்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!