இந்தியாவில் 38% தகவல் தொழில்நுட்பத்துறை பெண் ஊழியர்கள் – வீட்டில் இருந்து பணிபுரிய விருப்பம்!!

0
இந்தியாவில் 38% தகவல் தொழில்நுட்பத்துறை பெண் ஊழியர்கள் - வீட்டில் இருந்து பணிபுரிய விருப்பம்!!
இந்தியாவில் 38% தகவல் தொழில்நுட்பத்துறை பெண் ஊழியர்கள் - வீட்டில் இருந்து பணிபுரிய விருப்பம்!!
இந்தியாவில் 38% தகவல் தொழில்நுட்பத்துறை பெண் ஊழியர்கள் – வீட்டில் இருந்து பணிபுரிய விருப்பம்!!

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இந்திய பெண்கள் கிட்டத்தட்ட 38 சதவீதம் பேர் அலுவலகத்தில் வேலை செய்வதை விட, வீட்டில் இருந்தபடி வேலை செய்வதை (WFH) விரும்புகிறார்கள் என்று ஒரு புதிய கணக்கெடுப்பு முடிவில் தெரிய வந்துள்ளது.

வீட்டில் இருந்தே வேலை:

2020 நவம்பர் முதல் டிசம்பர் வரை தொழில்நுட்பம் அல்லது தகவல் தொழில்நுட்பப் பணிகளில் பணிபுரியும் ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆன்லைன் கணக்கெடுப்பில் இந்தியாவில் இருந்து 500 பேர் உட்பட 19 நாடுகளை சேர்ந்த 13,000 பேர் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று காரணமாக தொழில்துறை முன்னேற்றம் தேக்கமடைந்து உள்ளதாக 70% பெண்கள் தெரிவித்துள்ளனர்.

3 முதல் 9, 11 ஆம் வகுப்புகளுக்கான இறுதித் தேர்வுகளின் அட்டவணை வெளியீடு!!

வீட்டில் இருந்தே வேலை செய்யும் போது பெண்கள் அலுவலக வேலையுடன் சேர்த்து வீட்டு வேலைகளையும் செய்வதால், பணியில் அதிக நேரம் எடுத்துக்கொள்வதாகவும், 54% பெண்கள் தங்கள் குழந்தைகளின் வீட்டு பாடங்கள் உள்ளிட்ட பணிகளையும் கவனித்துக் கொள்வதாக தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி 36% பெண்கள் வீட்டில் இருந்து பணிபுரியும் பொழுது சுய அதிகார தன்மையை உணவர்வதாகவும் கூறி உள்ளனர். இந்த கணக்கெடுப்பு முடிவில் மொத்தமாக 38% பெண்கள் வீட்டில் இருந்தே வேலை செய்வதை விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!