
பேங்க்-ல் இருந்து பணபரிவர்த்தனை செய்பவர்களுக்கு செக்மேட்..!! பிரபல வங்கியின் அறிவிப்பால் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!!
வங்கிக் கணக்கு என்பது ஒரு வாடிக்கையாளருக்காக நிதிநிறுவனத்தால் பராமரிக்கப்படும் நிதிக்கணக்கு ஆகும். மேலும், அன்றாட நிதி பரிவர்த்தனைகள், பில்கள் செலுத்துதல் மற்றும் பண பரிமாற்றம் போன்ற சேவைகளை மேற்கொள்வதற்கு இந்த கணக்கு உதவுகிறது. இந்நிலையில் “கோடக் மஹிந்திரா வங்கி” தனது வாடிக்கையாளர்களுக்கு வங்கிக் கணக்கு சேவை மாற்றம் குறித்து மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, 2025 பிப்ரவரி 1ஆம் தேதி முதல் குறிப்பிட்ட டெபிட் கார்டுகளுக்கான இலவச ஏடிஎம் பரிவர்த்தனை வரம்பு மாற்றப்படும் என்று கோடக் மஹிந்திரா வங்கி தெரிவித்துள்ளது. மேலும், “டிமாண்ட் டிராப்ட், ஆர்டிஜிஎஸ், ஐஎம்பிஎஸ், செக் புக்” உள்ளிட்ட பல வங்கிச் சேவைகளுக்கான கட்டணத்தையும் கோடக் மஹிந்திரா வங்கி மாற்றியுள்ளது. இது மட்டுமின்றி, பணப் பரிவர்த்தனை அளவின் அடிப்படையில் கட்டணங்கள் புதுப்பிக்கப்பட்டு அதிக தொகைகளுக்கான செயலாக்க கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளது. மேலும், மாதாந்திர பரிவர்த்தனை வரம்பை மீறினாலும், “கூடுதல் காசோலை பிக்-அப் அல்லது டெலிவரி” கோரிக்கைக்கும் அதிக கட்டணம் விதிக்கவுள்ளது. எனவே, இந்த சேவைகளைப் பயன்படுத்துவதற்கு முன் மாற்றப்பட்ட கட்டண விவரங்கள் குறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொள்வது வாடிக்கையாளர்களின் செலவுகளை குறைக்கும் என நிதி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

























