பணம் அல்லது பொருட்களை பாதுகாக்க வங்கி லாக்கர்களை தேர்ந்தெடுப்பவரா நீங்கள்..? அப்போ இந்த விதிகள் பற்றி தெரிஞ்சுக்கோங்க..

0

சாமானிய மக்கள் பலர் தாங்கள் சேமித்த பணத்தை பாதுகாக்க வங்கிகளையே தேர்தெடுகின்றனர். மேலும்,  வங்கி கொள்ளை அதிகரித்து வருவதால் பண பாதுகாப்பு குறித்து மக்களிடையே அச்சம் நிலவிவருகிறது. இந்நிலையில்,லக்னோவில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் “சின்ஹாட்” கிளையில் நடந்த கொள்ளை சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது 42 லாக்கர்களை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். இதுபோன்ற சம்பவங்கள் ஏற்பட்டால் அதை சரி செய்ய ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் 2022-ல் லாக்கர் பாதுகாப்பு தொடர்பான இழப்பீடு விதிகளை வெளியிட்டது. இந்த விதிகளின்படி, வங்கியில் தீ, திருட்டு, கொள்ளை, கட்டிட இடிபாடு முதலிய காரணங்களால் வாடிக்கையாளருக்கு நிதி இழப்பு ஏற்பட்டால், அதை ஏற்றுக்கொள்ள கூறி வாடிக்கையாளர் வங்கியிடம் முறையிட வேண்டும். மேலும், லாக்கர் ஒப்பந்தத்தில் நியாயமற்ற நிபந்தனைகள் எதுவும் வங்கிகள் சேர்த்துள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது அவசியம். அவ்வாறு செய்வதன் மூலம் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மேற்கோள் காட்டி, வங்கிகள் தங்கள் பொறுப்புகளில் இருந்து தப்பிக்க முயலாமல் இருக்க இந்த விதியை ஆர்பிஐ கொண்டுவந்துள்ளது. மேலும், விலை மதிப்புள்ள பொருட்களை லாக்கரில் வைத்திருப்பதை தவிர்க்க கூறி வாடிக்கையாளர்களிடம் ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!