
உங்க சிபில் ஸ்கோர் ரொம்ப மோசமா இருக்க…? அத உடனே சரி செய்ய இந்த Steps எல்லாம் செய்ய மறக்காதீங்க..!!
CIBIL ஸ்கோர் என்பது உங்கள் நிதி வரலாற்றை மதிப்பீடும் அறிக்கையாகும். மேலும், உங்கள் சிபில் ஸ்கோர் 300 முதல் 550 வரை இருந்தால், ஸ்கோர் மோசமாகக் கருதப்படும். அதுவே 550-க்கு மேல் இருந்தால் சராசரியாகக் கருதப்படுகிறது. இதுவே 750-க்கு மேல் இருந்தால், வங்கிகள் உங்களுக்கு குறைந்த வட்டியுடன் எளிதில் கடன் வழங்க அதிக வாய்ப்புள்ளது. இந்த மோசமாக CIBIL ஸ்கோரை அதிகரிக்க விரும்புவர்கள் எவ்வளவு நாட்களில் எப்படி அதிகரிக்கலாம் என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
அதாவது, வருமானத்திற்கு அதிகமாக கடன் வாங்குவதும், அதை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தாமல் தள்ளிப்போடுவதால் சிபில் ஸ்கோர் குறைகிறது. இதனால் உங்கள் தேவைக்கு அடுத்த முறை வங்கியில் இருந்து கடன் பெறுவது கடினமானதாக மாறிவிடுகிறது. மேலும், இந்த மோசமான சிபில் ஸ்கோரை ஓரிரு நாட்களில் மேம்படுத்த முடியாது. இதற்கு குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 1 வருடம் வரை கால அவகாசம் எடுக்கும். இந்த நேரத்தில் நீங்கள் உங்களின் அனைத்து பில்கள் மற்றும் EMI-களை சரியான நேரத்தில் செலுத்த வேண்டும். இதை தொடர்ந்து, கிரெடிட் கார்டுகளை பயன்படுத்திய பின் அதற்கான பில்களை சரியான நேரத்தில் செலுத்த கூறி நிதி நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.


























I want to know about my cibilscore is now very low so i want to increase my cibilscore how should i do please refer me too.