தொழில் தொடங்க விருப்பம் உள்ளவரா நீங்கள்..? தமிழ்நாடு அரசு வழங்கும் சூப்பர் வாய்ப்பு..!!

0
?????? ?????? ????????? ??????? ???????..? ????????? ???? ???????? ??????? ????????..!!
தொழில் தொடங்க விருப்பம் உள்ளவரா நீங்கள்..? தமிழ்நாடு அரசு வழங்கும் சூப்பர் வாய்ப்பு..!!

தொழில் தொடங்க விருப்பம் உள்ளவரா நீங்கள்..? தமிழ்நாடு அரசு வழங்கும் சூப்பர் வாய்ப்பு..!!

பொதுவாக ஒரு துறையில் சிறந்து விளங்கிட அத்துறை சார்ந்த திறன்களையும், தகவல்களையும் கற்றுக்கொள்வது ஒருவரின் நிலையை உயர்த்தக்கூடும். எனவே அதற்காக தமிழக தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் 1 ஆண்டு சான்றிதழ் படிப்பை வழங்குகிறது. மேலும், வரும் ஜூன் மாதம் இதற்கான வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில், தற்போது இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. அதாவது, தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN), அகமதாபாத் EDII உடன் இணைந்து கடந்த ஆண்டு முதல் தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கத்திற்கான சான்றிதழ் படிப்பினை (CPEI) தொடங்கியது. இதன் மூலம் தொழில் முனைவோர் தலைப்பில் சிறந்த பாடத்திட்டம் மற்றும் நிபுணர்களின் பங்களிப்புடன் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

VOC துறைமுகத்தில் Senior Deputy Chief Accounts Officer காலிப்பணியிடங்கள் – ரூ.60,000/- சம்பளம் || உடனே விரையுங்கள்!

“இதில் சேர விண்ணப்பதாரர்கள் 21 – 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அத்துடன் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு அல்லது ITI தொழிற்கல்வி பயிற்சி முடித்தவர்கள் இந்த படிப்பில் சேர தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்பிற்கு ஒரு ஆண்டுக்கு ரூ.80,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படிப்பில் சேரும் மாணவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள 9 வளர் காப்பகங்களுக்கு இலவச அணுகல், தயாரிப்பு யோசனையிலிருந்து தயாரிப்பு வணிகமயமாக்கலுக்கு IVP வவுச்சர் போன்ற பல்வேறு சலுகைகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக இதில் சேர விருப்பும் மாணவர்கள் “https://www.editn.in/Web-One-Year-Registration” என்ற இணைப்பின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்றும், மேலும் விவரங்கள் பற்றி அறிந்துகொள்ள “https://www.editn.in/” என்ற இணையதளம் அல்லது “8668101638 / 8668107552″ என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!